திமுகவை விமர்சித்து ரிமோட்டால் டிவியை உடைத்தது இதனால்தான் - கமல்ஹாசன் விளக்கம்!

Kamal Haasan Tamil nadu Election Makkal Needhi Maiam
By Jiyath Mar 24, 2024 09:48 AM GMT
Report

தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை.. வியூகம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்                  

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு அளித்துள்ளது. கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட உள்ளது. மேலும். வரும் 29-ம் தேதி முதல் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல் பிரசாரம் செய்ய உள்ளார்.

திமுகவை விமர்சித்து ரிமோட்டால் டிவியை உடைத்தது இதனால்தான் - கமல்ஹாசன் விளக்கம்! | Break The Tv With Remote Kamal Haasan Explains

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவை விமர்சித்த கமல்ஹாசன், தொலைக்காட்சி பெட்டியை தனது கையில் இருந்த ரிமோட்டால் உடைப்பது போன்ற ஒரு வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

தற்போது அந்தக் கூட்டணியில் அவர் ஐக்கியம் ஆனதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். இதுதொடர்பாக இன்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில் "மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததற்கு நிறைய பேர் வருத்தப்பட்டார்கள்.

40 நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்; களமிறங்கும் வீரப்பன் மகள் - எந்த தொகுதியில்?

40 நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்; களமிறங்கும் வீரப்பன் மகள் - எந்த தொகுதியில்?

விளக்கம் 

இந்த முடிவை எப்படி என்ன தைரியத்தில் எடுத்தீர்கள் என்றெல்லாம் ராஜாஜியை கேட்டது போல் என்னையும் கேட்பார்கள். அவர் சொன்ன பதிலை தான் நானும் சொல்லுவேன். நான் காந்தியின் கொள்ளு பேரன்.

திமுகவை விமர்சித்து ரிமோட்டால் டிவியை உடைத்தது இதனால்தான் - கமல்ஹாசன் விளக்கம்! | Break The Tv With Remote Kamal Haasan Explains

நாம் காந்தியின் கொள்ளு பேரன்கள். எனக்கு சந்தர்ப்பவாதம் என்ற ஒரு வாதமே இல்லை. நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கேற்ப பேசக்கூடாது. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் இல்லை.. வியூகம்.

திமுகவை விமர்சித்து ரிமோட்டை எடுத்து டி.வியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டி.வி.. நமது ரிமோட்.. அது இங்குதான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்துக் கொள்ளலாம். டி.வி.க்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள்தான் நமக்கு முக்கியம்" என்றார்.