மக்களவை தேர்தல்: வாக்களிக்க வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி - நடிகர் சூரி குமுறல்!

Jiyath
in தொலைக்காட்சிReport this article
நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
காலை முதலே பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து வந்தனர். அந்தவகையில் நடிகர் சூரி சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களிக்க தனது மனைவியுடன் நடிகர் சூரி வருகை புரிந்தார்.
வேதனை
அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி மட்டுமே வாக்கு செலுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில் " கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன்.
இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். யாரோட தவறு என்று தெரியவில்லை. ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன் தயவு செய்து அனைவரும் 100% வாக்களியுங்கள்" என்று தெரிவித்தார்.