ரஜினிக்காக அத பண்ணேன்.. அப்போ அவர் சொன்ன விஷயம் - சிங்கம் புலி ஓபன் டாக்!

Rajinikanth Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 27, 2024 05:24 PM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் குறித்து காமெடி நடிகர் சிங்கம் புலி பேசியுள்ளார். 

சிங்கம் புலி

ரெட் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் சிங்கம் புலி. இதனையடுத்து மாயாவி என்ற படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து காமெடி நடிகராக களமிறங்கிய சிங்கம் புலி, பல படங்களில் நடித்து மக்களை சிரிக்கை வைத்துள்ளார்.

ரஜினிக்காக அத பண்ணேன்.. அப்போ அவர் சொன்ன விஷயம் - சிங்கம் புலி ஓபன் டாக்! | Actor Singam Puli About Actor Rajinikanth

இதனிடையே விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய சிங்கம் புலி "சுந்தர்.சி-யின் அருணாச்சலம் படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.

[

டபுள் ஆக்ட்

ரஜினி சாரை செட்டில் பார்த்து ரசித்துக் கொண்டே இருப்பேன். அந்தப் படத்தில் ரஜினி சார் ‘இனிதான் ஆரம்பம்’ என எழுதுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதில் பலருடைய கையெழுத்தை முயற்சி செய்து பார்த்தார்கள். யாருடையதும் திருப்தியாக இல்லை. உடனே, நான் அந்த வாக்கியத்தை எழுதிக் கொடுத்தேன்.

ரஜினிக்காக அத பண்ணேன்.. அப்போ அவர் சொன்ன விஷயம் - சிங்கம் புலி ஓபன் டாக்! | Actor Singam Puli About Actor Rajinikanth

என்னுடைய கையெழுத்தை பார்த்ததும் ரஜினி சாருக்கு பிடித்து விட்டது. 'சிங்கம்புலி' பெயர் நல்லாருக்கே. சிங்கம், புலின்னு நாம டபுள் ஆக்ட் பண்ணிருவோமா? இனிமே தான் உனக்கு ஆரம்பம் என வாழ்த்தினார்" என்று தெரிவித்துள்ளார்.