சிம்பு எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் கோலிவுட்!

Silambarasan Tamil Cinema
By Sumathi Nov 20, 2022 07:30 PM GMT
Report

சிம்பு தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சிம்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது எதார்த்த நடிப்பின் மூலம் உருவாக்கியவர். சமீபத்தில் இவர் நடித்த வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் கோலிவுட்! | Actor Silambarasan Raised His Salary

அதேபோல் இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்தில் சிலம்பரசனுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்கள். அதனையடுத்து சிம்பு ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சம்பளம்?

இந்நிலையில் சிம்பு தன் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது. முன்பு 8 கோடி சம்பளமாக வாங்கிவந்த சிம்பு தொடர் வெற்றிகளின் காரணமாக தன் சம்பளத்தை 30 கோடிக்கு மேல் உயர்த்தியுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சிம்பு எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் கோலிவுட்! | Actor Silambarasan Raised His Salary