நடிகர் செந்தில் அந்த விஷயத்தில் வீக் தான்; கல்யாணம் முடிஞ்சதும்.. சீக்ரெட் சொன்ன மனைவி!

Tamil Cinema Actors Senthil Tamil Actors Tamil Actress
By Jiyath Jun 08, 2024 09:37 AM GMT
Report

தனது கணவர் நடிகர் செந்தில் குறித்து அவரது மனைவி பேசியுள்ளார். 

நடிகர் செந்தில் 

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். இவர், ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தில் சிறிய ரோலில் தோன்றினார். பின்னர் பல படங்களில் நகைச்சுவையில் கலக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

நடிகர் செந்தில் அந்த விஷயத்தில் வீக் தான்; கல்யாணம் முடிஞ்சதும்.. சீக்ரெட் சொன்ன மனைவி! | Actor Senthil Wife About Her Husband Weakness

நடிகர் கவுண்டமணியுடன் அவர் சேர்ந்து செய்த காமெடிகள் அனைத்துமே இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக நடிகர் செந்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பின்னர் பல வருடங்கள் கழித்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

குஷ்பூ-வை பார்த்த ரஜினி; என்கிட்ட வாய்விட்டு கேட்ட விஷயம் - போட்டுடைத்த வைரமுத்து!

குஷ்பூ-வை பார்த்த ரஜினி; என்கிட்ட வாய்விட்டு கேட்ட விஷயம் - போட்டுடைத்த வைரமுத்து!

கொஞ்சம் வீக்தான்

கடைசியாக 'லால் சலாம்' படத்தில் செந்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது மனைவி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "எனது கணவர் கோடிக்கணக்கில் சம்பாதித்திருந்தாலும் அவர் பணம் விஷயத்தில் கொஞ்சம் வீக் தான்.

நடிகர் செந்தில் அந்த விஷயத்தில் வீக் தான்; கல்யாணம் முடிஞ்சதும்.. சீக்ரெட் சொன்ன மனைவி! | Actor Senthil Wife About Her Husband Weakness

அவருக்கு பணத்தை எண்ணக் கூட தெரியாது. அனைத்தையும் நான் தான் கவனிப்பேன். திருமணம் முடிந்ததும் அவரது அப்பா என்னிடம் "அவன் பண விஷயத்தில் ரொம்ப வீக். நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். அதிலிருந்து சம்பளம், மற்ற வருமானம் என அனைத்தையும் நானே கவனிக்க ஆரம்பித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.