ஜெயலலிதாக்கு சிலை சொன்ன...அவரு பொண்டாட்டி சிலை வைத்துள்ளார் எடப்பாடி - செந்தில் விமர்சனம்
பாஜகவில் இணைத்துள்ள நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
செந்தில்
பாஜக அதிமுகவில் ஜெயலலிதா இருந்த அவர் நட்சத்திர பேச்சாளராக கட்சிக்காக பல தேர்தல்களில் பிரச்சாரம் மேற்கொண்டவர் நடிகர் செந்தில். ஆனால், அவரின் மறைவிற்கு பிறகு பெரிதாக அரசியல் மேடைகளில் தென்பட அவர், தற்போது தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலுக்காக அவர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
புதுச்சேரி மக்களவை தொகுதிக்குட்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியது வருமாறு, நிறைய காசு வந்துவிட்டதால் எடப்பாடிக்கு நிறைய திமிரு வந்துவிட்டது.
பொண்டாட்டி சிலை
கொள்ளை அடித்த காசை வைத்துக்கொண்டு தற்போது திமிர்த்தனம் காட்டுகிறார். அவருக்கு எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் வேண்டாமாம். அம்மா சேவல் சின்னத்தில் நின்ற போதிலிருந்தே நான் இருந்தேன்.

அதிமுக "டைட்டானிக்"கை உடைத்து விட்டார்கள் - ஆகையால் இங்கு வந்துட்டேன் - தீவிர பிரச்சாரத்தில் செந்தில்
ஆனால் அப்போது எடப்பாடி இல்லை, பிறகு தான் வந்தார். அவருக்கு அடித்த லக்கு. அம்மாவின் மறைவிற்கு பின்பு நல்ல கட்சி எதுவென்று பார்த்து தற்போது இங்கு வந்தேன்.
கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவிற்கு சிலை செய்ய சொன்னால், எடப்பாடி அவரது மனைவி சிலையை செய்து வைத்து விட்டார்.
பிறகு அனைவரும் சண்டை போட்டது. அவர் யாரை ஏமாற்றுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? பாவம், சசிகலா என்று ஒரு அம்மா, அவரை ஏமாற்றி கால், கையில் விழுந்து இப்போ நீ யார் என்று கேட்கின்றார்.