சிம்ரனுடன் நெருக்கமாக இருந்தேன்.. எங்களுக்குள் அது நல்லா இருந்துச்சு - உண்மை உடைத்த அபபாஸ்!
நடிகர் அப்பாஸ் நடிகை சிம்ரனுடன் இருந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
அபபாஸ்
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வளம் வந்தவர் நடிகர் அபபாஸ். இவர் முதலில் மாடலிங் செய்து கொண்டிருந்தார், பின்னர் சினிமாவில் நுழைந்தார். இவர் 1996-ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படம் காதல் தேசம், இந்த படத்தில் ஹீரோவாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

இந்த முதல் படத்திலேயே இவர் நல்ல வரவேற்பை பெற்றார், சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்டார். அதன்பிறகு இவர் பிரபுதேவாவுடன் VIP, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி என பல படங்களில் நடித்தார். இதில் விஐபி, பூச்சூடவா இரண்டு படங்களிலும் அப்பாஸுடன் சிம்ரனும் நடித்திருந்தார்.
நடிகர் பேட்டி
இந்நிலையில், நடிகர் அப்பாஸ் நடிகை சிம்ரனுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார். அந்த சமயத்தில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. அதன்பிறகு சிம்ரன் பல பிரபலங்களுடன் நடித்து முன்னேறி சென்றார், நடிகர் அப்பாஸ் மார்க்கெட்டை இழந்தார். தற்பொழுது நடிகை குறித்து அப்பாஸ் பேசியுள்ளார், அதில், "சிம்ரன் எனக்கு நல்ல நண்பர், ஸ்கிரீனில் நல்ல ஜோடியாக தெரிந்தோம்.

ஆனாலும் இருவரும் சேர்ந்து அதிக படங்கள் பண்ணவில்லை. சிம்ரனுடன் தமிழில் இண்டு படங்களும் தெலுங்கில் ஒரு படமும் நடித்தேன். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த நல்ல கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருந்ததாகவும் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இப்போதும் அவருடன் நட்பாக இருக்கேன்" என்று கூறியுள்ளார். இது தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது.
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil