குடும்பத்தை காப்பாற்ற நியூசிலாந்தில் டாக்சி ஓட்டிய அப்பாஸ் - சாக்லேட் பாய்க்கு வந்த சோதனை!
சினிமாவை விட்டு விலகிய பின்னர் தான் சந்தித்த கஷ்ட்டங்கள் குறித்து பேசியிருக்கிறார் அப்பாஸ்.
அப்பாஸ்
ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் அப்பாஸ். இவர் 1996 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் என்ற படம் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,இந்தி என இதுவரை 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கென பெண் ரசிகர்கள் கூட்டமே இருந்தது. ரஜினி,கமல், அஜித் உள்ளிட்டோருடன் இனைந்து நடித்திருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு பச்சக்கல்லம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
பட வாய்ப்புகள் குறையவே திரை உலகை விட்டு காணாமல் போன அப்பாஸ் இப்போது நியூசிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்ட்டங்களை குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.
பேட்டி
ஆரம்ப காலத்தில் எனது படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் அதற்கு பின் எனது படங்கள் காணாமல் போயின. நான் வாடகை கூட கொடுக்க முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்தேன்.
10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தேன், அதே நேரத்தில் எனது காதலி என்னைவிட்டு போய்விட்டார். இதனால் எனக்கு தற்கொலை எண்ணம் வந்தது. வேகமாக வரும் வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள நான் நினைத்தேன். ஆனால் அவ்வாறு செய்தால் அந்த வாகன ஓட்டுனரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என எண்ணினேன். எனக்கிருக்கும் பிரபலத்தால் என்னால் வேலை தேடிச் செல்ல இயலவில்லை.
பின்னர் நான் குடும்பத்தோடு நியூசிலாந்தை வந்தேன். எனது குடும்பத்தை காப்பாற்ற அங்கு மெக்கானிக்காக பணிபுரிந்தேன், டாக்சி ஓட்டினேன். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்ட்டமாகத்தான் இருந்தது. இப்போதும் என்னை நடிக்க வருமாறு ஏராளமான அழைப்புகள் வருகிறது.
எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும் நான் இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவுகிறது. இதெல்லாம் நான் இந்தியா வந்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்.