போட்டி போடுறாங்க; எனக்கு அழகான பொண்ணு வேணும்; ரஜினியின் நண்பர் பேச்சு - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நடிகர் சத்யேந்திரா தெரிவித்துள்ள கருத்து கண்டனங்களைப் பெற்றுள்ளது.
நடிகர் சத்யேந்திரா
பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகர் சத்யேந்திரா. இவர் ரஜினி, ரகுவரன் என்று பல முன்னணி நடிகர்கள் உடன் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவருக்கு ரஜினி, ரகுவரன் உட்பட பல நடிகர்கள் இவருக்கு நெருங்கிய நண்பர்கள்.
இந்நிலையில், இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், எல்சியு என்றாலே லோகேஷுக்கு தெரியாது. அதற்கு அர்த்தம் என்ன என்று கூட தெரியாது. ஆனால், அவர் எல்சியில் படம் எடுக்கிறேன் என்று பொய் சொல்லுகிறார். அவருடைய படம் எல்லாம் ஒண்ணுமே இல்ல குப்பை .மக்கள் நம்பி ஏமாறுகிறார்கள்.
சர்ச்சை பேச்சு
மக்களும் ஒரு முட்டாள். அவர் படத்தை பார்க்கும் எல்லோருமே முட்டாள்கள் தான் எனப் பேசியிருந்தார். இந்தப் பேட்டியின் மூலம்தான் பிரபலாமானார். அதனைத் தொடர்ந்த பேட்டி ஒன்றில், எனக்கு ஆயிரக்கணக்கான பெண் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களின் போன் நம்பர் எல்லாம் இருக்கிறது. எனக்கு திருமணம் என்பது பிடிக்காது.
ஆனால், தினமும் ஒரு பெண்களுடன் பேச வேண்டும். ஒரு பெண் அழகாக இருக்க வேண்டும். இப்படிதான் ஒரு பெண் இருக்க வேண்டும். அவருடன் பேசணும் பழகனும் என்றெல்லாம் கூறியுள்ளார். இதற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதனையடுத்து, என்னை 20மில்லியன் பேருக்கு தெரியும், இப்போ என்னை 1000 கணக்கான யூடுயூப் சேனல் பேட்டி எடுக்க போட்டி போடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.