நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரத்குமார்
பிரபல தமிழ் நடிகரான சரத்குமார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்றுப்போக்கு காரணமாக நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு அவர், தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.
மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் மருத்துவர்களின் சிறப்பு கண்காணிப்பில் இருந்து வருகிறார். இது தொடர்பாக சரத்குமார் தரப்பில் வெளியிடப்பட்டுள அறிக்கையில்,
உடல்நலக்குறைவு
சரத்குமார் சிறு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை சென்றிருந்தார். பரிசோதனை நிறைவு செய்து தற்போது பூரண நலத்துடன் சென்னை வந்துகொண்டிருக்கிறார்.
யாரும் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.