அந்த வார்த்த.. இதனால்தான் விஜய்க்கும் எனக்கும் சண்டை - நடிகர் சஞ்சீவ் வேதனை!

Vijay Tamil Cinema Actors Tamil Actors Tamil Actress
By Jiyath Feb 15, 2024 03:50 PM GMT
Report

நடிகர் சஞ்சீவ் தனது நண்பர் நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். 

விஜய்-சஞ்சீவ்

நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்து "தமிழக வெற்றி கழகம்" என்ற தனது கட்சியின் பெயரையும் சமீபத்தில் அறிவித்தார். மேலும், இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

அந்த வார்த்த.. இதனால்தான் விஜய்க்கும் எனக்கும் சண்டை - நடிகர் சஞ்சீவ் வேதனை! | Actor Sanjeev About Actor Vijay Had A Fight

விஜய் அரசியலில் களமிறங்கியிருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தாலும், சினிமாவிலிருந்து விலகும் அவரின் முடிவு ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நடிகர் சஞ்சீவ் நேர்காணல் ஒன்றில் விஜய் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது "பொதுவா நாங்க அடிக்கடி சந்திக்கிறது கிடையாது. ஒரு முறை சந்தித்தபோது விஜய் என்னிடம் "நீ என்னடா எப்ப பார்த்தாலும் என்னை இமிடெட் பண்ற, உன்னோட ஸ்டைலில் நீ நடி.

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்!

கண்ண விட்டுட்டு அந்த இடங்கள தான் பாக்குறாங்க - ஓப்பனாக சொன்ன ஸ்ரீதேவி மகள்!

கோபப்பட்டுட்டேன் 

நீ என்ன மாதிரியே சிரிக்கிற, என்னை மாதிரியே பேசுற, இத கொஞ்சம் குறைச்சுக்க. மக்களுக்கு நீ என்னை மாதிரி பண்ணுறியா அல்லது நான் உன்னை மாதிரி பண்ணுறனா என்று சந்தேகம் வந்துவிடும் என்று சொன்னான்.

அந்த வார்த்த.. இதனால்தான் விஜய்க்கும் எனக்கும் சண்டை - நடிகர் சஞ்சீவ் வேதனை! | Actor Sanjeev About Actor Vijay Had A Fight

அதற்கு நான் கோபப்பட்டு விட்டேன். போதுவா ஒருத்தங்களை பிடித்துவிட்டால் அவர்களை மாதிரி இயல்பா சில விஷயங்கள் நமக்கு வந்துவிடும். அந்த மாதிரி தான் எனக்கு வந்திருக்கிறது. ஆனால் நான் கோபப்பட்டதும் விஜய் அன்று டக் என்று கோபத்தில் சரி நான் போறேன் என்று கிளம்பி போய் விட்டார்.

அது எனக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. விஜய்க்கு கோபம் வந்தால் எதுவுமே பேச மாட்டான். அந்த இடத்தில் இருந்து டக்கென்று கிளம்பி போய்விடுவான். அது அவனுடைய இயல்பு. பிறகு சில வருடங்களா நாங்க பேசவே இல்ல. அப்புறமாதான் பேசிக்கிட்டோம்" என்று பேசியுள்ளார்.