மருத்துவமனையில் சைஃப் அலிகானுக்கு தீவிர சிகிச்சை..மருத்துவ காப்பீட்டில் சிகிச்சை - அதிர்ச்சி தகவல்!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், ஜன.21 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சைஃப் அலிகான்
மும்பை பாந்த்ராவில் நடிகர் சைஃப் அலிகான் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை, அவரது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ப ஒருவர் புகுந்து சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த நடிகர் சைஃப் அலிகான் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.தொடர்ந்து சைஃப் அலிகான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடலில் சிக்கியிருந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
தீவிர சிகிச்சை
மேலும் நடிகர் சைஃப் அலிகான் உடலின் மற்ற 6 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், நடிகர் சைஃப் அலிகான் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரும் ஜன.21 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சைஃப் அலிகானின் காப்பீடு விவரம் வெளியாகி உள்ளது. அதில் 35 லட்சத்து 98 ஆயிரத்து 700 ரூபாய் என்றும், அதில், 25 லட்சம் ரூபாய் காப்பீடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.