நடிகர் ரோபோ சங்கர் மகளுக்கு நிச்சயதார்த்தம் - மாப்பிள்ளை யார் தெரியுமா..?
நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திராஜாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நிச்சயதார்த்தம்
'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர். தற்போது தமிழ் சினிமாவிலும் தனது நகைச்சுவை திறமையால் கலக்கி வருகிறார்.
இவரின் மகள் இந்திரஜா விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து முத்தையா, விருமன் ஆகிய படங்களிலும் நடித்தார்.
ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில் இந்திரஜாவிற்கும் அவரது முறை மாமன் கார்த்திக் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கார்த்தி மதுரையைச் சேர்ந்த `தொடர்வோம்' என்கிற அமைப்பின் நிறுவனர் ஆவார்.
தற்போது இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நக்கீரன் கோபால், அம்மா கிரியேஷன் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த ஜோடிக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

Optical illusion: கண்களை சோதித்து பாருங்கள்...இதில் இருக்கும் 3 வித்தியாச இலக்கங்கள் எங்கே? Manithan
