காதல் தோல்வி.. ஆன்மீகவாதிக்கு அடிபணிந்து சாமியாரான பிரபல நடிகை - ரகசியம் உடைத்த நடிகர்!
பிரபல நடிகை சாமியாராக மாறியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சித்தாரா
கேரளாவை பிறப்பிடமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில், 1986ம் ஆண்டு காவேரி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சித்தாரா. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது ராகங்கள், புதுவசந்தம், புரியாத புதிர் என்று பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் முன்னர் இருந்தே கவர்ச்சிகளை தவிர்த்து வந்தார், அதனால் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவில் இல்லை. இவர் சூப்பர் ஷட்டர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல படங்களில் துணை நடிகையாகவும், அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
பிரபலம் வெளியிட்ட தகவல்
இந்நிலையில், நடிகை சித்தாரா குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார், அதில், "அவர் திரையுலகில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஒருவரை காதலித்தார்.

ஆனால் பல ஆண்டுகள் அந்த காதல் கைகூடாமல் இருந்த நிலையில், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. பின்னர், இவர் கேரளாவில் ஒரு சாமியார் மீது அதீத பக்தி கொண்டு இவரும் சாமியாராகவே மாறிவிட்டார். மேலும், சில காலமாக இவர் படங்களில் கண்டிக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணம்" என்று கூறியுள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
தியாக தீபம் திலீபனின் ஆவண காப்பக நிதித்திரட்டல்! சிலை விவகாரத்தில் காவல்துறை எழுப்பிய கேள்வி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil