ஏற்கனவே திருமணம், ஒரு பெண் குழந்தை.. - ரெடின் மனைவி சங்கீதா குறித்த ஷாக் தகவல்..?
நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரெடின்-சங்கீதா
காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா,டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து, அண்ணாத்த, ஜெய்லர், விஜய்யின் பீஸ்ட், சிம்புவின் பத்து தல, விஷாலின் மார்க் ஆண்டனி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் திருமணம் செய்து கொண்டார். நடிகை சங்கீதா மாஸ்டர், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பரவும் தகவல்
ரெடின்-சங்கீதா ஆகியோர் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சங்கீத குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த 2009ம் ஆண்டு, சங்கீதாவிற்கு ஏற்கனவே க்ரிஷ் என்பவருடன் திருமணம் நடந்ததாகவும், சில கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் விவாகரத்து ஆனதாகவும் கூறப்படுகிறது. மேலும் 45 வயதாகும் சங்கீதாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகிறது.