கண்ட இடத்துல தொடுவார்; பிரேம்ஜி எல்லாம் ரொம்ப மோசம் - போட்டுடைத்த கோவா பட நடிகர்!
நடிகர் ரவிகாந்த் கோவா படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரவிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் 12 கெட்டப்பில் நடித்தவர் ரவிகாந்த்.
இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சர்தார், போலீஸ், பெண் வேடம், நாட்டாமை, வெளிநாட்டுக்காரர் என வித விதமான கெட்டப்புகளில் வெங்கட் பிரபு அந்த படத்தில் நடிக்க வைத்தார்.
கோவா பட அனுபவம்
அந்த பார் சீனில் பெண் வேடமிட்டு நடித்து இருந்தேன். பிரேம்ஜி மற்றும் வைபவ் ரொம்ப மோசம். அவர்கள் என்னை வைத்து செய்த சேட்டை எல்லாம் வெளியே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு படாத பாடு படுத்தி விட்டனர்.
வெங்கட் பிரபுவும் சும்மா விடவில்லை. பெண் வேடமிட்டு பெரிய பிரஸ்ட், பின்னாடி எல்லாம் செட்டப் செய்து வைத்திருந்தார்கள். க்ளீன் ஷேவ் செய்து விட்டனர். வெங்கட் பிரபுவே கண்ட இடத்துல கை வச்சு தட்டிட்டுப் போவான்.
அதன் பின்னர் ஷூட் முடிந்து என் டிரெஸ் எல்லாத்தையும் ரிமூவ் பண்ண பின்னர் தான் அங்கிருந்தவர்களுக்கு நான் ஆண் என்று தெரியும். அந்த டீமே ஜாலியானவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.