முதல் காதல் எப்போதும் ஸ்பெஷல் தான்.. நடிகையை விவாகரத்து செய்த ரஞ்சித், யாரை மணந்தார் தெரியுமா?
நடிகர் ரஞ்சித் விவாகரத்து செய்து மீண்டும் சேர்ந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் ஆ.கே.செல்வமணி தயாரித்த பொன் விலங்கு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். அதன்பின் சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் பல மலையாள படங்களில் நடித்துள்ளார், சில படங்களில் வில்லன் கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான பசுபதி கேர் ஆப் ராஜக்காபாளையம் திரைப்படம் தான் இவருக்கு பேர் வாங்கி கொடுத்தது. இவர் நேசம் புதிது படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த பிரியா ராமனை காதலித்த அவர், இருவீட்டார் சம்மதத்துடன் 1999-ல் திருமணம் செய்து கொண்டார்.
காதல்
இந்நிலையில், இவர்கள் இருவரும் 15 ஆண்டுகள் கழித்து சில காரணங்களால் பிரிந்தனர். அதன்பிறகு பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் தங்கையின் மகளான ராகசுதா என்ற நடிகையை 2014-ல் திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த காதல் தான் ரஞ்சித் பிரியாவை பிரிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுவும் வெகு நாள் நிலைக்கவில்லை சில காரணங்களால் பிரிந்து தனியாக வாழ்ந்தார். தற்பொழுது தனது முதல் மனைவியும் காதலியுமான பிரியா ராமனுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்து வருகிறார்.