அரைகுறை டிரஸ் போட்டுட்டு குத்தாட்டம் போடுறாங்க..!Happy Streets - கொந்தளித்த ரஞ்சித் !!
தற்போது தமிழகத்தின் பல்வேறு இடஙக்ளில் நடைபெற்று வரும் Happy streets குறித்து நடிகர் ரஞ்சித் தெரிவித்த கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Happy Streets
மக்களை குதூகலப்படுத்த தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் happy streets என்ற நிகழ்ச்சி வாராவாரம் ஞாயிறு கிழமைகளில் நடைபெற்று வருகின்றது. சென்னையை தாண்டி கோவை, மதுரை, திருநெல்வேலி என பல இடங்களில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
மக்கள் பலரும் ஒன்று கூடி பாட்டு போட்டு, ஆடி - பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரும் இந்நிகழ்ச்சிக்கு ஒருசாராரிடம் வரவேற்பு இருப்பது போல மற்றொரு புறத்தில் இதற்கு பெரிய எதிர்ப்பு குரலும் அவ்வப்போது எழுந்து வருகின்றது.
ரஞ்சித் கருத்து
இந்நிலையில் தான் இது குறித்து நடிகர் ரஞ்சித் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த காலத்தில் நிலா சோறு உள்ளிட்ட அனைத்திலும் எல்லாரும் ஒற்றுமையாக அமர்ந்து பாடல் பாடி கேட்போம் என்று குறிப்பிட்டு, ஆனால் இப்போது ஒரே வீட்டில் 15 பேர் இருந்தால் கூட செல்போனுடன் இருக்கிறார்கள் என்றும் சமீப காலமாக நிறைய மன கசப்பான விஷயங்கள் நடக்கிறது என்றார்.
அது உங்க எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் என்று கூறிய ரஞ்சித், இப்போது ஒரு கலாச்சாரம் வந்து இருக்கிறது - தெருவில் ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்துகிறார்கள் என சுட்டிக்காட்டி, பெண்கள் அரைகுறை ஆடையுடன் அதில் கலந்து கொள்கிறார்கள் என்றும் அவர்கள் எந்த ஆணுடனும், எந்த பெண்ணுடனும் ஆடலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
இது தமிழ் கலாச்சார் சீரழிவை நோக்கி செல்கிறது என தனது வருத்தத்தை பதிவிட்டார். மேலும், எனக்கு அரசு அதிகாரம் மட்டும் இருந்தால் பிடித்து ஆயுள் தண்டனை கொடுத்து இருப்பேன் என்ற அவர், இதற்கு பதிலாக உடற்பயிற்சி, யோகாவிற்கு எல்லாம் செல்லலாமே. நான் அதை எல்லாம் தவறு சொல்லவில்லை என்றும் அறிவுரை கூறினார். யார் மகனோ, யார் மகளோடு நடனமாடுவது.
மன அழுத்தம் போக்க தெரிவில் இறங்கி கூத்தடிப்பதற்கு பல பாராட்டுகள் அதற்கு ஆதரவும் தருகிறார்கள். இந்த மாதிரி கலச்சாரம் தான் அடுத்த அழிவுக்கு கொண்டு சேரும். நல்லதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் “ என்றும் வேண்டுகோள் வைத்தார் ரஞ்சித்.