11 வருட காத்திருப்புக்கு பின் அப்பாவான பிரபல நடிகர் - உற்சாகத்தில் மெகாஸ்டார் குடும்பம்!
பிரபல நடிகரான ராம் சரணுக்கு 11 ஆண்டிற்கு பிறகு குழந்தை பிறந்தது வைரலாகி வருகிறது.
ராம் சரண்
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இவரது மகனான ராம் சரண் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். மகதீரா, ரங்கஸ்தலம், ஆர்.ஆர்.ஆர் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கில் நடித்து தமிழில் டப் செய்த அணைத்து படங்களும் ஹிட் தான், இவரின் நடிப்பினால் பல தமிழ் ரசிகர்களையும் ஈர்த்துள்ளார். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
குழந்தை பிறந்தாச்சு
இந்நிலையில், ராம் சரண் கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது மனைவி கர்பமாக இருப்பதாக ராம் சரண் தெரிவித்திருந்தார்.
தற்போது இவர்களுக்கு 11 ஆண்டுகளுக்கு பின் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீண்ட காலம் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் இவரது குடும்பம் மற்றும் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், திரையுலகினர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.