வீட்டிலேயே மாமியாருக்காக கோவில் கட்டிய பிரபல தமிழ் நடிகர் - யார் தெரியுமா?
ராஜ்கிரண், தன்னுடைய மாமியாருக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.
நடிகர் ராஜ்கிரண்
‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ராஜ்கிரண். பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்த அவர் அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களை இயக்கினார்.
ராஜ்கிரணின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், அவர் இரண்டாவதாக ஜோதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நையினார் முகமது, ஜீனத் பிரியா என 2 பிள்ளைகள் உள்ளனர்.
வீட்டிலேயே கோவில்
இந்நிலையில், ராஜ்கிரணின் ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியானது. அதில், அவரது பங்களாவை சுற்றி மரங்கள் நிறைந்துள்ளது. வீட்டின் உள்ளேயே ஒரு கோவில் ஒன்றும் உள்ளது. அது தனது மாமியாருக்காக ராஜ்கிரண் கட்டிக்கொடுத்துள்ள கோவிலாம்.
100 வயதுக்கு மேலாகும் அவரது மாமியார் கடவுள் பக்தி அதிகம் கொண்டவராம். அவர் வழிபடுவதற்காக வீட்டிற்குள்ளேயே கோவிலை கட்டிக் கொடுத்துள்ளார்.
அந்த கோவிலில் இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என மூன்று மதத்தை சேர்ந்த கடவுள்களும் இடம்பெற்றுள்ளனர்.