பயமா இருக்கு..தேர்தல் நேரத்தில் மூச்சுகூட விடமுடியல..நடிகர் ரஜினிகாந்த் ஆதங்கம்!

Rajinikanth Election
By Swetha Mar 20, 2024 08:19 AM GMT
Report

மருத்துவமனை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தேர்தல் குறித்து பேசியுள்ளார்.

ரஜினிகாந்த்

சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது மேடையில், “பொதுவாக நான் எந்தத் திறப்பு விழாவுக்கும் செல்வதில்லை.

பயமா இருக்கு..தேர்தல் நேரத்தில் மூச்சுகூட விடமுடியல..நடிகர் ரஜினிகாந்த் ஆதங்கம்! | Actor Rajinikanth Speech About Election

ஏனெனில், நான் அதில் பார்ட்னர், பினாமி என செய்தி கிளப்பிவிடுகின்றனர். ஆனால், இந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்கு நான் ஒத்துக்கொள்ளக் காரணம் நான் மருத்துவத்துறையை மதிக்கிறேன் என்றார்.

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா வரை பல மருத்துவ மனைகளைப் பார்த்த உடம்பு இது. அவர்களுடைய நவீன மருத்துவத்தால் தான் நான் இங்கு இருக்கிறேன். மருத்துவமனைக்கு நாம் நோயாளியாகப் போவோம் அல்லது நோயாளிகளைப் பார்க்கப் போவோம்.

அதிரவைக்கும் பாலியல் ஸ்ட்ரைக்; கணவருடன் இருக்க மறுத்த பெண்கள் - என்ன பின்னணி?

அதிரவைக்கும் பாலியல் ஸ்ட்ரைக்; கணவருடன் இருக்க மறுத்த பெண்கள் - என்ன பின்னணி?

திறப்பு விழாவில் பேச்சு

நான் நோயாளியாகப் போனபோது இந்த மருத்துவமனைதான் நம்பிக்கைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என நெகிழ்ந்து பேசினார். மேலும், “என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது மீடியா அதிகம் வரமாட்டார்கள் என்றார்கள்.

பயமா இருக்கு..தேர்தல் நேரத்தில் மூச்சுகூட விடமுடியல..நடிகர் ரஜினிகாந்த் ஆதங்கம்! | Actor Rajinikanth Speech About Election

ஆனால், இங்கு வந்து பார்த்தபோது நிறைய கேமராக்கள். பார்த்ததும் பயமாகி விட்டது. ஏனெனில், இது தேர்தல் நேரம். மூச்சுவிடக்கூட பயமாக இருக்கிறது. இன்றைய தேதியில் யாருக்கு என்ன வியாதி வரும் என்பதை கணிக்கவே முடியவில்லை.

அந்தளவுக்கு காற்று, தண்ணீர் என எல்லாமே மாசாகி விட்டது. குழந்தைகள் மருந்தில் கூட கலப்படம் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.