சூப்பர் ஸ்டார் ரஜினியா இது? அச்சு அசல் அப்படியே இருக்கும் டீ வியாபாரி - வைரல் Video!
நடிகர் ரஜினிகாந்தை போலவே இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். படத்தில் அமிதாபச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்சன் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் உலகில் ஒருவரை போல 7 பேர் இருப்பார்கள் என்று சொல்வார்கள். அந்தவகையில் பார்ப்பதற்கு அச்சு அசல் ரஜினியை போலவே இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
அந்த வீடியோவில் இருப்பவர், இப்போது இருக்கும் ரஜினியின் தோற்றத்தையும், உடல் அமைப்பையும் கொண்டுள்ளார். அவரும் ரஜினியை போல முடியை கோதிக்கொள்கிறார். மேலும், ரஜினியைப் போலவே ஸ்டைலும் செய்கிறார்.

அந்த வீடியோவில் இருப்பவர் கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த தேநீர் வியாபாரி என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அது ரஜினி இல்லை என்பது தெரியாமல் "ரஜினிகாந்தின் எளிமையை பாருங்கள்" என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இவர் எளிமையான மனிதர்னு சொல்லுவானுங்க ஆனா இவளோ எளிமையானவரான்னு இப்ப தான் ஆச்சர்ய படுறேன்.... pic.twitter.com/pIbxiVYlpX
— ? DESPOTER ? (@despoters_12345) October 20, 2023
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் புத்தாண்டுக்குப் பிறகு புதிய தாக்குதல்கள்..! ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை IBC Tamil