சிகிச்சைக்குப் பின் குடும்பத்தினருடன் பேசிய ரஜினி - மருத்துவர்கள் சொன்ன தகவல்!
நடிகர் ரஜினிகாந்த் அடி வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அனுமதி எனத் தகவல் வெளியாகி உள்ளது
ரஜினிகாந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி ‘படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் . நேற்றிரவு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய அவருக்கு, உடல் சோர்வு மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டு மருத்துவரின் ஆலோசனைப்படிதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், திடீரென அனுமதிக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு இன்று இதய நோய் வல்லுநர் மருத்துவர் சாய் சதீஷ் தலைமையிலான 3 மருத்துவர்கள் குழு, இ.சி.ஜி எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
மருத்துவர்கள்
இதனையடுத்து காலை 6 மணி முதல் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அறுவை சிகிச்சை செய்து அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும்,குடும்பத்தினருடன் ரஜினி பேசியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் 2 முதல் 3 நாட்கள் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் இருப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.