விசித்ரா கூட ஒரே படுக்கையில்.. எல்லைமீறி பேசிய பிரதீப் ஆன்டனி - இணையத்தில் வைரல்!
நடிகர் பிரதீப் விசித்ராவிடம் அவதூறாக பேசியது தற்பொழுது வைரலாகி வருகிறது.
பிக் பாஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது. இதில் போட்டியாளராக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா கிருஷ்ணன், அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் கலந்துகொண்டனர்.
இந்த சீசனில் முதல் வாரமே தொடங்கிவிட்டனர், 2 நாளாக ஆட்டம் சூடுபிடித்து வருகிறது.
பிரதீப் பேச்சு
இந்நிலையில், போட்டியாளர் பிரதீப் விசித்ராவுடன் ஒரே பெட்டில் ஒன்றாக படுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு விசித்ரா, “ என் கூட ஒரே பெட்ல படுக்கணுமா, உன்னால முடியுமா?. வார்த்தையை பார்த்து பேச வேண்டும். பிக் பாஸ் இது நடந்தே ஆக வேண்டும்” என அவர் கோபத்துடன் கூறினார்.
என்கூட நீ எப்படி தூங்குறனு பாக்குறேன் என்று விசித்ரா கூற முடிஞ்சா படுக்கமாட்டேனா என்று பிரதீப் கூறியுள்ளார். இதனை அவர் தெரிஞ்சு தான் பேசுகிறாரா இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்று புரியாமல் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர், சிலர் இதனை கண்டித்து பல எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.