தமன்னா பண்ணா அப்படி..நான் பண்ணா இப்படியா? என்னை ஏமாற்றி.. - நடிகை விசித்ரா!
தனது கவர்ச்சியான கதாபாத்திரங்கள் குறித்து பேசியுள்ளார் விசித்ரா
நடிகை விசித்ரா
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் கவர்ச்சி நடிகை விசித்ராவும் ஒருவர்.
15 வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டார். ஆரம்ப காலத்தில் துணை நடிகராக களத்தில் இறங்கிய இவர். பின்வரும் நாட்களில் கதாநாயகி, வில்லி, டான்சர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் பலரையும் ஈர்த்தார். தற்போது அதே தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டஸ்ட்டன்டாக நுழைந்துள்ளார் விசித்ரா.
அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது கவர்ச்சியான கதாபாத்திரங்கள் குறித்து பேசியுள்ளார் விசித்ரா .
பேட்டி
அவர் பேசியதாவது "எனக்கு ஆரம்பத்தில் மேச்சூரிட்டியே இல்லை. படம் ஹிட்டானது கூட தெரியாது. தியேட்டரில் போய் பார்க்கும் போது தான், நான் வருகிற சீனுக்கு பயங்கர விசில், கைத்தட்டல் இருந்தது. மற்றபடி, என்னுடைய கதாபாத்திரம் என்ன? பேசிய டயலாக்கோட அர்த்தம் என்ன? என்பது கூட எனக்கு தெரியாது.
என் வயதை விட 15 வயது அதிகமான கேரக்டரை தான் நான் அப்போது செய்தேன். அவர்கள் சொன்னதை செய்தேன். நான் மிகவும் கவர்ச்சியா இருந்தேன். அதனால் எனக்கு அந்த மாதிரி கதாபாத்திரம் வந்தது. வாழ்வே மாயம் ஸ்ரீதேவி கதாபாத்திரம் என்று கூறி என்னை ஏமாற்றிவிட்டனர். தமன்னா காவாலா பாடலில் ஆட்டம் போடுகிறார், வெப்சீரிஸில் போய் பார்த்தால் நடிக்கிறார்.
அவர்களை அப்படி ஏற்கும் போது, என்னை மட்டும் ஏன் கவர்ச்சியாக மட்டும் அடையாளப்படுத்துகிறார்கள்? இப்போது நான் இருந்திருந்தால், தமன்னாவை தூக்கி சாப்பிட்டிருப்பேன். 20 வருசத்திற்கு முன்னாடி நான் வந்துவிட்டேன், இப்போது தான் நான் வந்திருக்க வேண்டும்" என்று விசித்ரா பேசியுள்ளார்.