நடிகர் பிரபுதேவா மகளுக்கு நயன்தாராவின் பெயரை வைத்தாரா? - ரசிகர்கள் ஷாக்!

Prabhu Deva Nayanthara
By Vinothini Jun 21, 2023 07:33 AM GMT
Report

 பிரபல நடிகர் பிரபுதேவா தனது மகளுக்கு முன்னாள் காதலியின் பெயரை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபுதேவா

பிரபல நடிகரான பிரபுதேவா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது டான்ஸ் திறமையால் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவருக்கு முதலில் 1995-ம் ஆண்டு ரமலத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார், இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தது.

actor-prabhudeva-named-his-child-as-nayanthara

பின்னர் நடிகை நயன்தாராவை சிறிது காலம் காதலித்து வந்தார். அதன்பிறகு கொரோனா சமயத்தில் பிசியோதெரபிஸ்ட்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமனம் செய்துகொண்டார்.

பெண் குழந்தை

இந்நிலையில், இவர்களுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதனால் தான் நன்றி கூற திருப்பதிக்கு சென்றனர் என்று தெரியவந்துள்ளது. பிரபுதேவாவின் குடும்பத்தில் அனைவரும் ஆண் வாரிசுகள், அதில் தற்பொழுது முதன்முதலில் பெண் குழந்தை பிறந்ததை குடும்பமே கொண்டாடி வருகின்றனர்.

actor-prabhudeva-named-his-child-as-nayanthara

இதனை தொடர்ந்து, இவரது பெண் குழந்தைக்கு இவரின் முன்னாள் காதலியான நயன்தாராவின் பெயரை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சிலர் காதலை மறவாமல் அதற்கு மரியாதை கொடுக்கிறார் என்று கூறியுள்ளனர். மேலும், சிலர் இவை அனைத்தும் வதந்தி என்று பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.