குழந்தை பிறந்ததை மறைத்த நடிகர் பிரபுதேவா - பெண் குழந்தையை இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
பிரபல நடிகர் பிரபுதேவாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது, வம்சத்தில் முதல் பெண் வாரிசு என்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரபுதேவா
பிரபல நடிகரான பிரபுதேவா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது டான்ஸ் திறமையால் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவருக்கு முதலில் 1995-ம் ஆண்டு ரமலத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார்.
இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தது, சில ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டால் ரமலத்தை விவாகரத்து செய்தார். பின்னர் பிரபல நடிகையான நயன்தாராவை சில காலம் காதலித்து வந்தார், அதிலும் ஓதுவராமல் பிரிந்தனர்.
அதன்பிறகு கொரோனா சமயத்தில், இவர் மும்பையில் படப்பிடிப்பில் இருந்தபொழுது முதுகுவலிக்காக சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் பிசியோதெரபிஸ்டான டாக்டர் ஹிமானி சிங் என்பவருடன் அறிமுகம் உண்டானது.
குழந்தை
இந்நிலையில், இவர்கள் இருவரின் நட்பு காதலாக மாறியது. பின்னர் இருவரும் மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம் பிரபுதேவாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரும் ஹிமானி சிங்கும் திருப்பதி சென்று தரிசனம் செய்து விட்டு வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அந்த சமையத்தில் ஹிமானி இவர் பத்திரமாக பார்த்துக்கொள்வதாகவும், இவரை திருமணம் செய்ததற்கு பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டுருந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு தற்போது அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்காக தான் நன்றி கூற திருப்பதிக்கு சென்றனர் என்று தெரியவந்துள்ளது. பிரபுதேவாவின் குடும்பத்தில் அனைவரும் ஆண் வாரிசுகள் தான் அதில் தற்பொழுது முதன்முதலில் பெண் குழந்தை பிறந்ததை குடும்பமே கொண்டாடி வருகின்றனர்.