பிரபாஸுக்கு விரைவில் திருமணம்; பொண்ணு யாரு தெரியுமா - அத்தை தகவல்?
நடிகர் பிரபாஸ் திருமணம் விரைவில் நடக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
நடிகர் பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் பலரது மனதிலும் ஆட்சி செய்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவருக்கு தமிழிலும் ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான ஆதிபுருஷ் படத்தில் நடித்தார்.
ஆனால் இந்தப்படம் பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு, படுதோல்வி அடைந்தது. அதன்பின் சலார் படம் ஹிட் கொடுத்தது. தற்போது வெளியாகியுள்ள கல்கி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்கிடையில் 44 வயதாகும் பிரபாஸ் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மறைந்த நடிகர் கிருஷ்ணம் ராஜுவின் மனைவியும் பிரபாஸின் அத்தையுமான ஷ்யாமலா தேவி,
திருமணம்?
”நன்மை ஒரு மனிதனை எந்த அளவிற்கு அழைத்து செல்லும் என்பதை கல்கி படம் தெளிவாக காட்டியிருக்கிறது. பலரும் பிபாகுபாலி படத்திற்கு பிறகு பிரபாஸ் எந்த படத்திலும் இனி ஹிட் கொடுக்கமாட்டார் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், அவர்கள் பேசிய பேச்சுக்களை தவிடுபொடியாக்கும் வகையில் மீண்டும் ஹிட் படங்களை கொடுத்தார் பிரபாஸ்.
அதேபோல் தான் திருமணமும், அதற்கான நேரம் வரும், அதற்காக தான் காத்திருக்கிறோம். மற்றதெல்லாம் கிருஷ்ணர் மேலே இருந்து பார்த்துக்கொள்வார். இதுவரை பிரபாஸ் நினைத்ததெல்லாம் ஒவ்வொன்றாக நடந்துள்ளது, அது போல்தான் திருமணமும் நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.