நடிகர் பிரபாஸ்ஸூக்கு திடீர் திருமணம் - அட.. பொண்ணு யார் தெரியுமா?
நடிகர் பிரபாஸ் பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபாஸ்
பான் இந்தியா நடிகராக கலக்கி வருபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் தமிழில் ஏரளமான ரசிகர்களை பிடித்துவிட்டார். தொடர்ந்து, பிரபாஸுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
பல பேட்டிகளில் பிரபாஸிடம் அவரது திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் சமாளிக்கும் விதமாக ஒரு சிறிய புன்னைகையுடன் அந்த கேள்வியினை கடந்து சென்றுவிடுவார்.
திருமணம்?
இதற்கிடையில், பாகுபலியில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்த அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என செய்திகள் பரவியது. ஆனால், இருவரும் நண்பர்கள் தான் என பிரபாஸ் தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது.
தற்போது, பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD, என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், “டார்லிங்ஸ்… ஒருவழியாக மிகவும் ஸ்பெஷலான நபர் தன்னுடைய வாழ்க்கையில் வந்துவிட்டார்.
காத்திருங்கள் !”எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு திருமணம் செய்து கொள்ள பெண் பார்த்து விட்டதாக தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.