ஆசியாவிலேயே மிகவும் அழகான ஆண் என்ற பட்டியலில் முதலித்தைப் பிடித்தார் நடிகர் பிரபாஸ்!
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த புகழ் மூலம் அவரது சம்பளம் உயர்ந்திருப்பது மட்டுமல்லாமல் அவரது படங்களுக்கான வியாபார எல்லையும் விரிவடைந்திருக்கிறது.
ஆரம்ப காலங்களில் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்த பிரபாஸ், தற்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். கைவசம் ஒரு சில ஹிந்தி படங்களை வைத்திருக்கிறார்.
இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கான ஆசியாவை சேர்ந்த மிகவும் அழகான 10 ஆண்கள் பற்றிய பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த பட்டியலில் நடிகர் பிரபாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் அப்பாஸ் நக்வி என்பவர் இரண்டாம் இடத்தையும், இந்தியாவில் இருந்து டிவி நடிகரான விவியன் டி சேனா என்பவர் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆசியாவிலே மிகவும் அழகான ஆண் என்ற பட்டியலில் பிரபாஸ் முதலிடம் பிடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர்களுக்கு பெருமை சேர்க்கும் வேண்டிய செய்தியாகவும் இது கருதப்பட்டு வருகிறது.
பிரபாஸ் தற்போது தேசிய விருது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் அவரது 21வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் பிரபாஸ் உடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். மேலும், ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan