நயன்தாராவை கோபத்துல அப்படி சொல்லிட்டேன் - நடிகர் புலம்பல்!
பிரபல நடிகை நயன்தாராவை ஒதுக்கியதை குறித்து பிரபல நடிகர் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் தற்பொழுது முக்கிய முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.
இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இவர் ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தவர்.
சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் காதலில் விழுந்து பிறகு எழுந்து மீண்டும் சினிமாவுக்குள் வந்து நடிக்க தொடங்கினார்.
பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து தற்போது இரண்டு குழந்தைகளுடன் உள்ளார்.
நடிகர் பேட்டி
இந்நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நயன்தாரா குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகம் ஆவதற்கு முன்பு, பார்த்திபனின் குடைக்குள் மழை என்ற படத்தில் நடிக்க இருந்தார்.
அதுகுறித்து பேசிய அவர், "நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு நான் இயக்கிய 'குடைக்குள் மழை' படத்தில் நடிக்க வைக்க அவரை ஒருநாள் காலை 8 மணிக்கு வர சொன்னேன்.
ஆனால், அன்று அவர் வரவில்லை. எனக்கு போன் செய்து 'சார் என்னால் நேற்று வர முடியவில்லை.
இன்றுதான் பஸ் ஏறுகிறேன். நாளை காலை கண்டிப்பாக வந்துவிடுகிறேன்' என சொன்னார். கோபத்தில் இருந்த நான் 'இல்லை வர வேண்டாம்' என சொல்லிவிட்டேன்.
எனக்கு அப்படித்தான் கோபம் வரும். இப்போது அவர் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்" என்று கூறினார்.