தாலி கழுத்துக்கு தான் மனசுக்கு இல்ல -7 வருஷம் தான்; அப்புறம்.. மனம் திறந்த பார்த்திபன்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
தாலி எல்லாம் கழுத்துக்கு தான் மனசுக்கு கிடையாது என பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் பார்த்திபன்
நடிகை சீதா பார்த்திபனுடன் காதல் வயப்பட்டு கடந்த 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை 11 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது.
அதையடுத்து, 2002 ஆம் ஆண்டு வேலன் சீரியலில் நடித்த போது அதில் நடித்த சீரியல் நடிகர் சதீஷுடன் காதல் ஏற்பட்டு 2010ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 2016ல் விவாகரத்தில் முடிந்தது.
திருமண வாழ்க்கை
இந்நிலையில் பார்த்திபன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், பொதுவா கணவன் மனைவி ரெண்டு பேரால் ஏழு வருஷம் தான் சேர்ந்து வாழ முடியும். கணவன் மனைவிக்குள் ஏழு வருட வாழ்க்கை என்று சொல்லுவாங்க. ஏழாவது வருடத்தில் ஒரு அரிப்பு வந்துவிடும். அந்த அரிப்பு ரெண்டு பேரும் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பை கொடுக்காது.
அதிகமான பிரச்சனை அந்த ஏழாவது வருடத்தில் தான் நடக்கும். அதில் தப்பிச்சுட்டா கொஞ்ச நாள் வாழ்க்கை போகும் அவ்வளவுதான். தாலி எல்லாம் மனசுக்கு கிடையாது கழுத்துக்கு மட்டும்தான். மனசு கடல் மாதிரி பெருசு. காதல் என்பது நல்லா இருக்கும்.
ஆனால் கணவன் மனைவியான பிறகு அங்க நிறைய பிரச்சனை இருக்கும். கசப்புகள் அதிகமாய் இருக்கும். எத்தனையோ பிரச்சனைகள் வரும் ஒன்னு பினான்சியல் பிரச்சனையாக இருக்கலாம் அல்லது சக்ஸஸ் ஆகுவதில் பிரச்சனையாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.