அப்பாக்காக கொஞ்ச வேண்டிக்கோங்க - ICU'வில் பிரபல சீரியல் நடிகர் - எமோஷனலான மகள்
நடிகர் நேத்ரன்
சின்னத்திரையில் நடிக்கும் பலரை நமக்கு தெரியும். ஆனால், அவர்களின் குடும்பத்தினரை பற்றியோ அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தோ பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இன்னும் சொல்லப்போனால், பலரின் பெயர்களே நமக்கு தெரியாது. இருப்பினும் சிலர் முகம் மட்டும் சட்டென நியாபகம் வந்துவிடும். அப்படி, ஒருவர் தான் நேத்ரன். தமிழ் சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நேத்ரன், மிகவும் பரிட்சயமான ஒரு முகமே. தீபா என்பவரை திருமணம் செய்துகொண்ட நேத்ரனுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
மூத்த மகள் அபிநயா சமீபத்தில் வெளியான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அபிநயா தற்போது தனது தந்தையின் உடல் நிலை குறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு கவனம் பெற்றுள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தங்களது தந்தை நேத்ரன், கேன்சர் பாதிப்பின் காரணமாக, ICU'வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு மக்கள் பிராத்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.