60 வயதில் 4வது திருமணம் செய்யும் நடிகர்; எப்படி நடக்குதுனு பாக்குறேன் - மனைவி ஆவேசம்!

Indian Actress Marriage Divorce
By Sumathi Jan 09, 2023 04:30 PM GMT
Report

நடிகர் ஒருவர் 44வயது நடிகையை 4வது திருமணம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

4வது திருமணம்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பவித்ரா லோகேஷ்(44). இவர் தமிழிலும் ராதா மோகன் இயக்கிய கவுரவம், விஷாலின் அயோக்யா, ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க.பெ.ரணசிங்கம், லாஸ்லியா மற்றும் தர்ஷன் நடித்த கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் அம்மா வேடங்களில் நடித்திருந்தார்.

60 வயதில் 4வது திருமணம் செய்யும் நடிகர்; எப்படி நடக்குதுனு பாக்குறேன் - மனைவி ஆவேசம்! | Actor Naresh Third Wife Ramya Raghupathi Interview

இந்த நடிகை இதற்குமுன் சுசேந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து, பின் அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக செய்தி வெளியாகியது.

பொங்கிய மனைவி

நடிகர் நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. தற்போது 4வதாக பவித்ரா லோகேஷை அவர் காதலித்து வந்தார். மேலும், இருவரும் லிப்கிஸ் போட்டோவை வெளியிட்டு தாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில், அவரது 3வது மனைவி ரம்யா, 'எக்காரணம் கொண்டும் நான் இந்த திருமணத்தை நடத்த விடமாட்டேன். நான் இதுவரை உண்மையாக விவாகரத்து கொடுக்கவில்லை. கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்த வேளையில் இதுபோன்ற செயலை இருவரும் கைவிட வேண்டும். எந்த காரணத்திற்காகவும் நரேசை விட்டுக்கொடுக்க நான் தயாராக இல்லை' என்று கூறியுள்ளார்.