60 வயசுல 4வது கல்யாணம் தேவையா? லிப்லாக் கொடுத்தபடி அறிவித்த நடிகர்

Marriage Divorce
By Thahir Jan 04, 2023 02:13 AM GMT
Report

சீனியர் நடிகர் ஒருவருக்கு ஏற்கனவே 3 முறை விவாகரத்துஆகியுள்ள நிலையில் , தற்போது 44வயது நடிகையை 4வது திருமணம் செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2வது திருமணத்திற்கு தயாரான நடிகை 

150க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பவித்ரா லோகேஷ்.

இவர் தமிழிலும் ராதா மோகன் இயக்கிய கவுரவம், விஷாலின் அயோக்யா, ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விசேஷம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க.பெ.ரணசிங்கம், லாஸ்லியா மற்றும் தர்ஷன் நடித்த கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் அம்மா வேடங்களில் நடித்திருந்தார்.

60 வயசுல 4வது கல்யாணம் தேவையா? லிப்லாக் கொடுத்தபடி அறிவித்த நடிகர் | 4Th Marriage Is Necessary At 60

இந்த நடிகை இதற்குமுன் சுசேந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து, பின் அவரிடம் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்போது 44வயதாகும் பவித்ரா லோகேஷ், நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கடந்த ஆண்டே செய்திகள் பரவிவந்தது.

செருப்பால் அடிக்க முயன்ற மனைவி 

நடிகர் நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. தற்போது 4வதாக பவித்ரா லோகேஷை அவர் காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நரேஷும், பவித்ராவும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மைசூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததை அறிந்து கொண்ட நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா, அங்கு சென்று இருவரையும் செருப்பால் அடிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பணத்துக்கு ஆசைப்பட்டு தான் தனது கணவர் நரேஷை தன்னிடம் இருந்து பவித்ரா லோகேஷ் பிரித்துவிட்டதாக கூறியிருந்தார் ரம்யா. தற்போது புத்தாண்டை ஒட்டி தனது 4வது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

60 வயதில் 4வது திருமணம் 

பவித்ராவும், நரேஷும் ஜோடியாக கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு, பின் இருவரும் லிப்கிஸ் போட்டோவை வெளியிட்டு தாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

60 வயசுல 4வது கல்யாணம் தேவையா? லிப்லாக் கொடுத்தபடி அறிவித்த நடிகர் | 4Th Marriage Is Necessary At 60

தற்போது நெட்டிசன்கள், பல்லு போன வயதில் பக்கோடாவா என நரேஷ் பாபுவை ட்ரோல் செய்து வருகின்றனர். நடிகர் நரேஷ் பாபுவுக்கு தற்போது 60 வயது ஆகிறது.

இவர் 44 வயது நடிகையான பவித்ரா லோகேஷை திருமணம் செய்ய உள்ளது தான் தற்போது ஹாட் டாப்பிக்காக கன்னட திரையுலகில் பார்க்கப்படுகிறது.