44 வயதில் 60 வயது நடிகரை 2வது திருமணம் செய்த நடிகை - முன்னாள் கணவர் பகீர் தகவல்!
நடிகர் நரேஷ் பாபு 44 வயது நடிகையை திருமணம் செய்துள்ளார்.
நடிகை பவித்ரா லோகேஷ்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவரது சகோதரர் நரேஷ் பாபு. இவர் மூத்த நடன அமைப்பாளர் ஸ்ரீனுவின் மகளை முதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில பிரச்சணை காரணமாக விவாகரத்தி செய்துவிட்டு ரேகா சுப்ரியாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால், இந்த உறவும் நீடிக்கவில்லை.
2வது திருமணம்
50வது வயதில் ரம்யா ரகுபதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. இந்நிலையில், 4வதாக நடிகை பவித்ரா லோகேஷை(44) திருமணம் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இருவரும் அண்மையில் தான் திருமணம் செய்தனர். பவித்ராவுக்கு இது 2வது திருமணம். இதனைத் தொடர்ந்து, பவித்ராவின் முன்னாள் கணவர் பிரசாத், “பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்பக் கூடியவர்.
அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். நரேஷ் பாபுவுக்கு ரூ. 1500 கோடி சொத்து இருக்கிறது என்பதாலேயே அவரைத் திருமணம் செய்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.