14 வயதில் மகள்.. மீண்டும் கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி - வைரலாகும் ஃபோட்டோ!
14 வயதில் மகள் உள்ள நிலையில், மீண்டும் தனது மனைவி கர்ப்பமான குட் நியூஸை தெரிவித்துள்ளார் நடிகர் நரேன்.
நடிகர் நரேன்
மிஷ்கின் இயக்கிய ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் நரேன். இதனையடுத்து அவர் ’பள்ளிக்கூடம்’ ’அஞ்சாதே’ 'தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் நரேன், மஞ்சு என்ற தொலைக்காட்சி தொகுப்பாளினியை திருமணம் செய்து கொண்டார்.
2வது முறையாக கர்ப்பம்
இந்த தம்பதிக்கு தன்மியா என்ற 14 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது 15வது திருமண நாளை கொண்டாடிய நடிகர் நரேன்

தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள தகவலையும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan