பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டியடித்த நடிகர் மோகன் பாபு - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
நடிகர் மோகன் பாபு செய்தியாளர்களை விரட்டியடித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மோகன் பாபு
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வரும் மோகன் பாபு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு லட்சுமி மஞ்சு என்ற மகளும் விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு என 2 மகன்களும் உள்ளனர்.
தந்தை முதல் மகள் வரை தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். கடந்த சில வருடங்களாக மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சினை நடந்து வந்துள்ளது.
சொத்து பிரச்சினை
இந்நிலையில், தனது 2வது மகன் மனோஜ் மஞ்சு மீது சொத்து தகராறு தொடர்பாக ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரில், "நான் அலுவலகத்தில் இருந்த போது எனது வீட்டில் 30 பேர் அத்துமீறி நுழைந்து தொந்தரவு செய்துள்ளனர். வீட்டு ஊழியர்களிடம் என்னை வீட்டை விட்டு நிரந்தரமாக போக சொல்லி மிரட்டினார்கள்.
தனது மகன் மனோஜ் மஞ்சு மற்றும் மருமகள் மோனிகா இருவரும் சமூக விரோதிகளுடன் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மனோஜும் தனது தந்தை மீது புகார் அளித்திருந்தாக தகவல் வெளியானது.
பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்
இந்நிலையில், இன்று(12.10.2024) மாலை மனோஜ் மஞ்சு உள்ளிட்ட சிலர் ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் மோகன் பாபுவின் வீட்டு முன்பு குவிந்தனர்.
வெளியாட்களை அப்புறப்படுத்த காவல் துறையினரும் தனியார் பாதுகாவலர்களும் அங்கு வந்தனர். அப்போது வெளிய வந்த மோகன் பாபுவிடம் பத்திரிகையாளர்கள் சிலர் மைக்கை நீட்டியபோது ஆத்திரமடைந்த அவர், மைக்கை பிடுங்கி பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தார்.
Big Breaking News...
— మీ కాపలా కుక్క (@mekaapalaKukka) December 10, 2024
💥మీడియా పై దాడి చేసిన మోహన్ బాబు!
😳😳😳😳😳😳😳#ManchuFamily #MohanBabu pic.twitter.com/1zt2e5jZPt
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோகன் பாபுவின் இந்த செயலுக்கு தெலங்கானா பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.