குடிப்பதற்கு முன் பின் இதை மட்டும் சாப்பிட்டா அவ்வளவுதான் - நடிகர் மன்சூர் அலிகான் ஃபிரீ அட்வைஸ்!
நடிகர் மன்சூர் அலிகான் மது பிரியர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
மன்சூர் அலிகான்
தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே இவரது நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்தார், அதனால் இவருக்கு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார், பின்னர் திடீரென அரசியலுக்குள் குதித்தார். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர் தண்னி கட்சி தொடங்கினார், அதுவும் காணாமல் போனது. தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் பேட்டி
இந்நிலையில், இவர் பிரபல யூ-டியூப் சேனல் மூலமாக தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அதில், "வெண்டைக்காய் நல்லா சாப்பிடுங்க. ஆனால் தண்ணீர் சாப்பிடும் நபர்கள் உடனே வெண்டைக்காய் சாப்பிட வேண்டாம். அதே போல் அகத்திக் கீரை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.
குடிக்கும் முன்பும் சரி, சாப்பிட்ட பிறகும் சரி அகத்திக் கீரை உண்ண வேண்டாம். மீறி சாப்பிட்டால், உடனே அவர்கள் உயிரிழந்து போவீர்கள். வெண்டைக்காய் சாப்பிட்டு குடித்துவிட்டு இரவு தூங்கினால் தலையில் எல்லா இடங்களிலும் வலி பரவும்.
அப்போதே தெரிந்து கொள்ளலாம் மூளைக்கு நல்லது செய்து இருக்கும், ஆனால் கெட்டதான மதுவை அனுப்பு உள்ளீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.