ரோட்டில் காத்திருந்த நடிகர் மனோ பாலா - எச்சரித்து அனுப்பி இளையராஜா..!
இளைஞானியை காண மனோ பாலா நீண்ட நேரம் ரோட்டில் காத்திருந்த நிலையில் அவரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார் இளையராஜா.
ரோட்டில் காத்திருந்த இளையராஜா
தமிழ் சினிமாவின் பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா. இவர் புகழின் உச்சிக்கே சென்றாலும் பல விமர்சனங்கள் உண்டாகும் அளவிற்கு வெறுப்பையும் பெற்றுள்ளார்.
ஒரு காலகட்டத்தில் இசைஞானியின் கால்ஷீட்டிற்காக பல இயக்குநர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த காலமும் இருந்துள்ளது.
இந்த நிலையில் அண்மையில் இயக்குநரும், நடிகருமான மனோ பாலா இறப்புக்கு இரங்கல் தெரிவிக்க வந்த இளையராஜா தனக்காக மனோ பாலா ரோட்டில் காத்திருந்ததாக தெரிவித்து இருந்தார்.
எச்சரித்து அனுப்பிய இளையராஜா
அப்போது மனோ பாலா இயக்குநர் பாராதிராஜாவிடம் பணியாற்றி வந்தார். அவரிடம் பணியாற்றுபவர்களிடம் இளையராஜா மிகவும் கனிவுடனும், மரியாதையாகவும் நடந்து கொள்வாராம்.
மனோ பாலா ரோட்டில் நிற்பதை பார்த்த இளையராஜா நீங்களும் மற்றவர்களும் ஒன்றா, எதற்காக இப்படி என் நிற்கிறீர்கள் இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.