அந்த கல்யாணம் ஆகாத நடிகைய தான் திருமணம் செஞ்சுக்கணும் - ஓப்பனாக சொன்ன மணிகண்டன்!
தனது திருமண ஆசை குறித்து நடிகர் மணிகண்டன் பேசியுள்ளார்.
நடிகர் மணிகண்டன்
இயக்குநர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் ஜெய்பீம், குட் நைட் படங்களில் நடித்து பிரபலமான மணிகண்டன் நடித்துள்ள படம் லவ்வர். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 9-ம் தேதி) வெளியாகிறது.
இந்நிலையில் லவ்வர் படத்தின் பிரமோஷனுக்காக மணி கண்டன், பிரபல யூட்யூபரான விஜே சித்து மற்றும் ஹர்திக் உடன் இணைந்து காமெடியாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நக்மாவின் ரசிகர்
அதில் பேசிய மணிகண்டன், "எனக்கு ஒரு க்ரஷ் இருந்தாங்க. அவங்களை என் பிரண்டு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிட்டாங்க. அதனால எனக்கு கல்யாணம் மேல விருப்பம் இல்லாமல் போயிட்டு.
அது போல நான் நடிகை நக்மாவின் ரசிகர் கல்யாணம் பண்ணுனா அவங்கள தான் கல்யாணம் பண்ணனும்னு இருந்தேன்" என்று பேசியுள்ளார்.