19 வயசுல அப்படி நடந்துச்சு.. இப்போவும் அங்க போனா கை கால் எல்லாம் நடுங்கும் - குட் நைட் ஹீரோ ஓபன் டாக்!
குட் நைட் பட ஹீரோ தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் மணிகண்டன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையால் வெற்றியும் பெற்றார் மணிகண்டன். ஆனால் அவர் பெரிதாக அறியப்படாமல் இருந்தார், பின்னர் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள், காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, ஏலே, ஜெய்பீம் என பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் ஹீரோவாக குட் நைட் என்ற படத்தில் நடித்துள்ளார், அதன்மூலம் பல ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார், அதோடு அவர் திரைப்படங்களுக்கு வசனமும், திரைக்கதையும் எழுதி வருகிறார்.
வெளிப்படை பேட்டி
இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரது வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் அல்லது மறக்கமுடியாத நாள் குறித்து கேட்டுள்ளார். அப்பொழுது அவர் கூறுகையில், "நான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது 19 வயது தான் இருக்கும் அப்போது டெங்கு காய்ச்சல் வந்து குணமாகி இரண்டு நாள் தான் ஆகியிருந்தது.
ஒரு திரைப்படத்திற்காக ஆடிசனுக்கு நான் சென்றிருந்தேன். அப்போ அங்கிருந்த உதவி இயக்குனர் ஒருவர் டயலாக் பேப்பரை கொடுத்து என்னிடம் படித்துப் பார்த்துவிட்டு வந்து நடிக்க சொன்னார். அப்போது அங்கு வந்த இயக்குனர் அந்த உதவி இயக்குனர்களை திட்ட தொடங்கிவிட்டார். இந்த மூஞ்சிய இந்த கேரக்டருக்கு ஆடிசன் செய்கிறீர்களா? என்று கூறி அவர்களை மோசமாக திட்டினார்.
என்னையும் கூப்பிட்டு உனக்கெல்லாம் நடிக்க வேண்டும் என்று ஆசையா? உங்க வீட்டில் இத பத்தி சொன்னியா? அவர்களும் உன்னை தடுக்கவில்லையா? என்று மிகவும் கேவலமாக பேசி அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டார்.
எனக்கு இது முதல்முறையாக நடந்ததால் என்னால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போது வரை அந்த இடத்திற்கு சென்றால் எனக்கு வியர்த்து, கையெல்லாம் நடுங்கி விடும்" என்று கூறியுள்ளார்.

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பலுசிஸ்தான் சுதந்திர நாடு...! பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம் - அதிரடி அறிவிப்பால் அதிரும் உலகம் IBC Tamil
