40 வருட சினிமா வாழ்க்கை ....முண்டாசுப்பட்டி நடிகர் மதுரை மோகன் காலமானார்!!

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் மதுரை மோகன் முண்டாசுப்பட்டி படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்றார்.
மறையும் திரைக்கலைஞர்கள்
இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு துயரமான ஒரு காலமாகவே இருந்து வருகின்றது. தொடர்ந்து பல திறமையான கலைஞர்கள் மரணித்து வருகின்றனர்.
நடிகர்கள் மனோபாலா, மயிலசாமி, மாரிமுத்து போன்ற பல கலைஞர்கள் தொடர்ந்து மறைந்து வருகின்றார்.
தற்போது மீண்டும் ஒரு திறமையான கலைஞரை தமிழ் திரையுலகம் இழந்துள்ளது. 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் இன்று காலை மரணமடைந்துள்ளார்.
ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் @dir_ramkumar அவர்களுக்கும் pic.twitter.com/2xYw8QDw1S
— Kaali Venkat (@kaaliactor) December 9, 2023
இவருடைய மரணம் திரையுலகில் உள்ள பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
