2வது திருமணம் முடிந்து 2 வாரம்தான் - சிக்கிய கிருஷ்ணா - நிலை என்ன?
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணா கைது
நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதை பொருளை பயன்படுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் எனவே தனக்கு ஜாமீன் வேண்டுமென்று மனு தாக்கல் செய்தார். ஆனால், அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நடிகர் கிருஷ்ணாவும் சிக்கினார்.
2வது திருமணம்
ஆனால், தனது உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன என்றும் தான் அதை பயன்படுத்தியதே கிடையாது என்று விசாரணையில் கூறிய கிருஷ்ணாவின் வீட்டில் சோதனை நடத்தியதில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015ல் ஹேமலதா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் கிருஷ்ணா திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து தனது மனைவி தன்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார் என புகார் கொடுத்து விவாகரத்து பெற்றார்.
பின்னர், பல ஆண்டுகள் கழித்து இந்த மாதம் ஜூன் 6ம் தேதி நடிகர் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் முகத்தை கூட காட்டாமல், ஒரு பெண்ணுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு புதிய தொடக்கம் என பதிவிட்டிருந்தார். அதற்கு பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.