போதைப்பொருள் வழக்கு; மருத்துவ பரிசோதனை - நடிகர் ஸ்ரீகாந்த் கைது

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கு
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத்,
மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின் பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என பல புகார் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
ஸ்ரீகாந்த் கைது
இதற்கிடையில் பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்நிலையில், பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில்,
நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும்,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தற்போது இதன் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.