மொய்ப் பணத்துக்காக பத்திரிக்கை? நடிகர் கிங்காங் வேதனை
வேதனையோடு கிங் காங் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகள் திருமணம்
நடிகர் கிங் காங் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ரஜினி, கமல், ஷாருக்கான் உட்பட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக தன்னுடைய மகள் கீர்த்தனா திருமணத்திற்காக பல பிரபலங்களுக்கும் நேரில் சென்று பத்திரிக்கை கொடுத்தார். தொடர்ந்து கிங்காங் மகள் கீர்த்தனாவிற்கும் நவீன் என்பவருக்கு கோவிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், கிங்காங் பல பிரபலங்களுக்கும் தேடி தேடி பத்திரிக்கை வைத்தது பணத்திற்காகத்தான் என்று சிலர் விமர்சித்தது குறித்து கிங்காங் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நான் எல்லோருக்கும் என் மகள் கல்யாணத்திற்கு பத்திரிக்கை கொடுத்தது பணத்திற்காக என்று சிலர் என் போஸ்ட்க்கு கீழே கமெண்ட் போடுகிறார்கள்.
கிங்காங் வேதனை
நான் மனசார சொல்றேன் நான் யாருகிட்டயும் ஒரு ரூபாய் எதிர்பார்த்து பத்திரிக்கை வைக்கவில்லை. எல்லாருடைய ஆசீர்வாதமும் என்னுடைய மகளுக்கு வேண்டும் என்று தான் கூப்பிட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மகள் பேசுகையில், நானும் நவீனும் இது ஐந்து வருடங்களாக காதலித்து வந்தோம். முதலில் குடும்பத்திற்கு தெரிய வந்தபோது எல்லோரும் மறுத்து தெரிவித்தாலும் பிறகு என்னுடைய பாட்டி என்னுடைய கல்யாணத்திற்கு எல்லாரையும் சம்மதிக்க வைத்து விட்டார்.
இப்போது அவர் இறந்து போய்விட்டார். அவருடைய திதி நாளைக்கு முன்பு என்னுடைய கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று அப்பா ஆசைப்பட்டார். அதற்காகத்தான் இந்த கல்யாண ஏற்பாடு. இவ்வளவு பிரமாண்டமாக நடக்கிறது.
அதோடு என்னுடைய அப்பாவின் இத்தனை வருட சேமிப்பு எல்லாவற்றையும் என் கல்யாணத்திற்காகத்தான் அவர் செலவு செய்திருக்கிறார் என கூறியுள்ளார்.