தந்தைக்கு பெருமை ; நடிகர் கிங்காங் மகள் +2 பொதுத்தேர்வு மதிப்பெண் என்ன தெரியுமா?
நடிகர் கிங்காங்கின் மகள் 404 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
மதிப்பெண்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தியவர் நடிகர் கிங்காங். இவரது இயற்பெயர் சங்கர். இவர் நடிகர் ரஜினிகாந்தின் ‘அதிசயபிறவி’ படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இவரது மனைவி கலா. இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், இவரது மூத்த மகள் சக்தி பிரியா 12ம் வகுப்பு படிக்கிறார்.இன்று வெளியான +2 தேர்வு முடிவுகளில் 404 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். இந்த செய்தி கிங்காங்கின் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டாரம் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. என் மகள் எங்களைப் பெருமைப்பட வைத்துள்ளார்.
கிங்காங் மகள்
அவள் கனவை நிறைவேற்றுவதுதான் எங்கள் விருப்பம். கல்லூரியில் அவளுக்குப் பிடித்த படிப்பை படிக்க வைப்போம்” என்று கிங்காங் நெகிழ்ச்சியாய் பேசியுள்ளார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் உள்ளிட்ட பலருடன் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் கிங்காங்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிங்காங். அண்மையில் இவர் தனது மகளுடன் அளித்த பேட்டி ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.
அதில் கிங்காங்கின் உருவம் பற்றி அவரது மகள் பேசியபோது, “அப்பாவின் இந்த உருவம் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளோம். எனது நண்பர்கள் என் வீட்டிற்கு என்னைப் பார்க்க வருவதை விட அப்பாவை பார்க்கத்தான் அதிகம் வருவார்கள்” என்று கூறியுள்ளார்.
.