கிங்காங் பாணியில் மனித குரங்குடன் காதல் செய்த பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

belgium woman affiar with chimpanzee kingkong love
By Petchi Avudaiappan Aug 23, 2021 05:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 பெல்ஜியம் நாட்டில் மனித குரங்கை காதலித்த பெண்ணுக்கு பூங்கா நிர்வாகம் வித்தியாசமான தண்டனை வழங்கியுள்ளது.

ஹாலிவுட் படமான கிங்காங்கில் மனித குரங்கு ஒன்று பெண் மீது காதல் வயப்பட்டது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற சம்பவம் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள வனவிலங்குப் பூங்காவிற்கு வனவிலங்கு ஆர்வலரான அடிய் திம்மெர்மன்ஸ் என்ற பெண் அடிக்கடி சென்றுள்ளார்.

அங்குள்ள சீட்டா என்ற மனித குரங்குடன் அவர் அதிக நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். அந்த குரங்கும் கண்ணாடி கூண்டுக்குள் அந்த பக்கம் இருந்து அதிக நேரம் செலவிடுவதையே விரும்பியுள்ளது. இருவரும் முத்தங்களையும் பரிமாறிக்கொண்டுள்ளதை கண்காணித்த பூங்கா நிர்வாகம் இருவரும் காதல் செய்வதை கண்டுபிடித்தது.இதனால் அப்பெண்ணுக்கு பூங்கா நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அடிய் திம்மெர்மன்ஸ், நான் அந்த மனிதக் குரங்கை காதலிக்கிறேன். அவனும் என்னை விரும்புகிறான். ஏன் அவனை என்னிடமிருந்து பிரிக்கின்றனர் என தெரியவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மற்ற மனிதக் குரங்குகளுடன் சீட்டா நேரம் செலவிடுவதில்லை என்றும், அது மற்ற மனிதக் குரங்குகளைப் போன்று இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.