அறிமுக இயக்குநர்கள் இயக்கத்தில் நடிப்பது ஏன்? - ஒரே வார்த்தையில் அதிரவைத்த கவின்
ப்ளடி பெக்கர் படத்தினை இயக்கிய சிவபாலன் ,இயக்குநர் நெல்சனின் உதவியாளர் ஆவார்.
கவின்
தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகரான கவின் டாடா, ஸ்டார் போன்ற படங்களின் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்துக் கொண்டார். தற்போது இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் 'ப்ளடி பெக்கர்' (Bloody Beggar) திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்துள்ளார்.மேலும் ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் உள்ளிட்ட நடிகர் , நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் தீபாவளியன்று (அக்.31) திரையரங்குகளில் வெளியாக உள்ளது .கடந்த சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.அப்போது நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கவின், "இந்த படம் உருவானதற்கு ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட நம்பிக்கை தான் காரணம். முதல்முறை சிவபாலன் கதை கூறும்போது, இயக்குநர் நெல்சன் ஒழுங்காக பண்ணிடுவியா? எனக் கேட்டார்.
ப்ளடி பெக்கர்
எதற்காக இப்படிக் கேட்கிறார் என்ற கேள்வி இருந்தது.பிறகு என் மொத்த திறமையும் இந்த திரைப்படத்தில் காட்ட வேண்டும் என முடிவு செய்தேன் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், இவர்களுடன் இருந்து தான் நான் அனைத்தையும் கற்றுக்கொண்டு வெளியே சென்றேன்.
மீண்டும் இவர்களுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.அப்போது அறிமுக இயக்குநர்களுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அடுத்தடுத்து அறிமுக இயக்குநர்களுடன் தான் வேலை பார்க்க இருக்கிறேன்.
ஏனென்றால், அறிமுக இயக்குநர்களுக்கு பொதுவாகப் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.அதனால்தான் புது இயக்குநர்களுடன் இணைந்து வேலை பார்க்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.