நடிகர் கவினுக்கு திருமணம்... பொண்ணு பாத்தாச்சு, தேதி குறிச்சாச்சு - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Tamil Cinema Bigg Boss Kavin Tamil Actors
By Vinothini Aug 01, 2023 07:18 AM GMT
Report

பிக் பாஸ் பிரபலம் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்கபோவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கவின்

சின்னத்திரை நட்சத்திரமாக பிரபலமானவர் நடிகர் கவின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார். இவர் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ்ஸில் கலந்துகொண்டார், அதில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். தற்பொழுது இவர் வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

actor-kavin-is-getting-married-soon

2021ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான லிஃப்ட் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப்பெற்றுத் தந்தது. அதன்பின்னர் டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட்டானது. கல்லூரி மாணவன்,காதலன்,கணவன், அப்பா என ஒரே படத்திலேயே அனைத்து கேரக்டரிலும் நடித்திருந்தார், இதில் உள்ள செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் அனைவரின் நெஞ்சங்களை கவர்ந்தார்.

திருமணம்

இந்நிலையில், இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்தார், ஆனால் அது செட் ஆகவில்லை. சிறிது காலம் சிங்கிளாக கெரியரில் கவனம் செலுத்தி வந்தார்.

actor-kavin-is-getting-married-soon

தற்பொழுது இவரது வீட்டில் பெரியவர்கள் பார்த்த பெண்ணை கவினுக்கு பிடித்துவிட்டதால், அவர் ஒகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆகஸ்ட் 20-ம் தேதி கவினுக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவின் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் பரவி வரும் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.